எனது முன்னாள் பயிற்சியாளர் அழைப்பின்
பேரில் அவரது வீட்டிற்கு இரவு விருந்துக்கு சென்றேன். இரவு உணவு உண்டு முடிந்தபின்
பேசிக்கொண்டிருந்தபோது ‘என்ன நடந்தது? நீங்கள் H.O வுக்கு ஏதும்
கடிதம் எழுதினீர்களா?’ என்று ஒன்று தெரியாதது போல அவர் கேட்டார்,
அவருக்கு எல்லாம் தெரியும் என்பது
எனக்குத் தெரியும் என்பதை
காட்டிக் கொள்ளாமல்,’பம்ப் செட் கடன் பெற்ற வாடிக்கையாளர் சொன்னதை கேட்டு மேலாளரிடம்
சொல்லியும் எந்த
நடவடிக்கையையும் எடுக்காததால் அதுபற்றி எழுதினேன்.’ என்று சொன்னேன்.
உடனே அவர் ‘நீங்கள்
அவசரப்பட்டுவிட்டீர்கள்.மேலாளருக்கு வேண்டாதவர்கள் ஏதாவது
சொல்லியிருப்பார்கள்.அதை நம்பி
வீணே H.O வுக்கு எழுதியிருக்கிறீர்கள். என்னிடமாவது
கேட்டிருக்கலாமே?’ என்றார்.
அதற்கு நான் ‘கடன் பெற்ற அந்த விவசாயி மேலாளர் மேல் எந்த குற்றமும் சொல்லவில்லையே.
கடைக்காரர் வங்கிப் பெயரை சொல்லி பணம் வாங்கினார் என்று தானே சொன்னார்.அவர் எப்படி
மேலாளருக்கு வேண்டாதவராக இருப்பார்?வங்கி பெயரை சொல்லி பணம் வாங்கியதை அந்த கடைக்காரர் மறுத்ததால் மேலாளரிடம்
சொன்னேன். அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் H.O வுக்கு கடிதம் எழுதினேன்.
அது ஒன்றும் பெரிய குற்றம்
இல்லையே. ஏனோ எனக்கு அப்போது உங்களிடம் கேட்கவேண்டுமென்று தோன்றவில்லை.
H.O வுக்கு கடிதம் எழுதிவிட்டேன் என்பதற்காக,வேளாண் நிதித்
துறையின் Probationary Officer ஆக நான் இருந்தும், நீங்கள் பார்த்த
துறையை என்னைப்
பார்த்துக்கொள்ளும்படி தலைமை அலுவலகம் சொல்லியிருந்தும், பழிவாங்கும் நோக்கத்தில் Counter ல் என்னை
எழுத்தர் பணியை செய்ய மேலாளர்
சொன்னார். அதற்காக நான் வருத்தப்படவில்லை. கெட்டதிலும் ஒரு நல்லதுதான்
நடந்திருக்கிறது. General Banking வேலையையும் நன்றாக கற்றுக்கொண்டேன்.’ என்றேன்.
அதற்கு அவர் ‘நீங்கள் வங்கிக்கு புதியவர் என்பதால் இங்குள்ள
நடைமுறைகள் பற்றியும், உடன் பணிபுரிபவர்கள் பற்றியும்
உங்களுக்குத் தெரியவில்லை.
ஒரு கட்டிடத்தைப் பார்க்கிறீர்கள்
என்றால் அதன் வெளித்தோற்றத்தை வைத்து அந்த கட்டிடத்தின் மதிப்பை எடை போடாமல்
அதனுடைய அடித்தளம் (Foundation) எப்படி என்றும் பார்த்து மதிப்பிடவேண்டும்.
அதுபோல ஒருவரை பார்க்கும்போது அவரது தோற்றத்தை வைத்து
எடை போடக் கூடாது. அவரது பின்புலத்தையும் தெரிந்து கொள்ளவேண்டும்.
ஏன் இதை சொல்கிறேன் என்றால்.உங்களுக்கு
இந்த மேலாளர் பற்றி எதுவும் தெரியாது.இவர் தலைமை அலுவலகத்திற்கு மிகவும்
வேண்டப்பட்டவர்.அது தெரியாமல் நீங்கள் நடந்துகொண்டு விட்டீர்கள்.அதனால்தான் உங்கள்
கடிதத்தின் மேல் அவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நல்ல வேளை. நீங்கள்
அந்த
கடிதம் எழுதியதற்காக உங்கள் மேல் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லையே. அதை
நினைத்து சந்தோஷப்படுங்கள்!
உங்கள் இடத்தில் நான் இருந்திருந்தால் மேலாளரிடம் சாதுர்யமாகப் பேசி உள்ள
நிலையை விவரமாக எடுத்து சொல்லியிருப்பேன்.
சரி. பரவாயில்லை. எல்லாம்
நல்லதிற்குத்தான் என்று எடுத்துக்கொண்டு விட்டீர்கள். இந்த கிளையில் பயிற்சி
முடித்து தலைமை அலுவலகம் செல்கிறீர்கள். இங்கு நடந்ததை எல்லாம் ஒரு கனவு போல் எண்ணி மறந்துவிடுங்கள். திரும்பவும் அங்கு
சென்று இது பற்றி பேசவேண்டாம்.’ என்றார்.
அவர் இவ்வாறு சொன்னதும் அவர் ஏன்
விருந்துக்கு அழைத்தார் என்பது எனக்கு விளங்கிவிட்டது. அன்று என்னை வீட்டிற்கு
அழைத்தது மாற்றலாகி செல்கிறேனே என்று விருந்து தர அல்ல.
விருந்து என்ற சாக்கில்
வீட்டிற்குஅழைத்து எனக்கு ‘மூளைச் சலவை’ செய்து, தலைமை அலுவலகத்தில் நான் மேலும் ஏதும்
சொல்லாமலிருக்க வேண்டும்
என்பதற்காகத்தான் என்பதை அவர் கொடுத்த அந்த ‘சொற்பொழிவிலிருந்து’ புரிந்து கொண்டேன். நிச்சயம் அந்த மேலாளர் சொல்லித்தான்
அவர் என்னிடம் பேசுகிறார் என்பதும் தெரிந்தது.
அவரது நோக்கம் தெரிந்த பிறகு, மேலாளர் பற்றி பேசிப் பிரயோஜனம் இல்லை
என்பதால் அந்த இடத்தை விட்டு கிளம்பினால் போதும் என்று அவர் சொன்னதிற்கெல்லாம் சரி என சொல்லிவிட்டு
அறைக்குத் திரும்பினேன்.
மறு நாள் உடன் பணிபுரிந்துகொண்டு
இருந்த நண்பர்களிடம் விடைபெற்று மங்களூர் சென்று அங்கிருந்து உடுப்பி போய் ஒரு
தங்குமிடத்தில் அறை எடுத்து தங்கினேன். அதற்கு மறுநாள் காலை மணிப்பாலில் இருந்த
எங்கள் தலைமை அலுவலகத்திற்கு சென்றேன்.
தொடரும்
நிச்சயமாக அது பற்றி அங்கு மேலே சொல்வீர்கள் என்று நான் எண்ணுகிறேன் . பார்ப்போம்.. நல்வாழ்த்து சகோதரா.
பதிலளிநீக்குVetha.Elangathilakam.
கட்டிடம் - மனிதன்... நல்ல ஒப்பீடு ...
பதிலளிநீக்குதொடருங்கள் சார் ! நன்றி !
வேணாம்... வலிக்குது... அழுதுடுவேன்... என்று வடிவேலு சொல்கிற மாதிரி அவர் உங்களுக்கு அமைதி போதித்து அறிவுரை பண்ணியிருக்கிறார். தலைமை அலுவலகம் சென்றாகி விட்டது. அதன்பின் என்ன நடந்தது..?
பதிலளிநீக்குஅனுபவங்களை வியக்கும் வண்ணம் அழகாக எடுத்துடரைக்கிறீர்கள்
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்கா திலகம் அவர்களே! தொடர்வதற்கு நன்றி!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு பால கணேஷ் அவர்களே!அங்கே என்ன நடந்தது என்பது எல்லோரும் எதிர்பார்த்ததுதான்!!
பதிலளிநீக்குவருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!
பதிலளிநீக்குஎழுத்து நடை வெகு சுவாரஸ்யம் எங்கும் நிறுத்தாமல் தொடர்ந்து வாசிக்க வைத்து விடுகிறது! அடுத்து என்ன நடக்கும் ஆவலோடு!
பதிலளிநீக்குReading between the lines என்பதற்கு நீங்கள் அவர் சொன்னதிலிருந்து புரிந்துகொண்டது நல்ல உதாரணம்.. உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் சார்!
பதிலளிநீக்குவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ‘வரலாற்று சுவடுகள்’ நண்பரே!
பதிலளிநீக்குவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு Bandhu அவர்களே!
பதிலளிநீக்குஅடுத்து மனிபாலா?தொடருங்கள்
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!அடுத்தது மணிப்பால் தான்.ஆனால் மணிப்பாலில் நான் பெற்ற அனுபவம் பற்றி பின் எழுதுவேன்.
பதிலளிநீக்குDinner diplomacy. Vasudevan
பதிலளிநீக்குசரியாய்ச் சொன்னீர்கள் திரு வாசு அவர்களே! வருகைக்கு நன்றி!
பதிலளிநீக்குவிருந்து என்ற சாக்கில் வீட்டிற்குஅழைத்து எனக்கு ‘மூளைச் சலவை’ செய்து,
பதிலளிநீக்குஅனுபவ வரிகள் !
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!
பதிலளிநீக்குமூளைச்சலவை செய்வதற்காகவே ஒரு விருந்து ஏற்பாடா .... மிகவும் சுவாரஸ்யமாகத்தான் செல்கிறது இந்தத்தொடர்.
பதிலளிநீக்குமணிப்பால் தலைமையகத்தில் இனி என்னென்ன நடக்குமோ .... ஆவலுடன் ....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!
பதிலளிநீக்கு