திங்கள், 30 செப்டம்பர், 2013

எனது ஓவியங்கள் 14


நான் பொழுதுபோக்கிற்காக வரைந்த ஓவியங்களை, அக்டோபர் 2010 இல் எனது ஓவியங்கள் என்ற தலைப்பில் 13 பதிவுகளாக வெளியிட்டிருந்தேன்.


அந்த ஓவியங்களைப் பார்க்காதவர்கள், கீழே தந்துள்ள இணைப்புகளை சொடுக்கிப் பார்க்கலாம்.

எனது ஓவியங்கள்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13


நான் வரைந்த படங்கள் அநேகம் இருந்தாலும், அவைகள் அனைத்தையும்  
பதிவேற்றிஎனது வலைப்பக்கத்திற்கு வருபவர்களை 'துன்புறுத்த'  
விரும்பாததால் ஓரிரு பதிவுகளோடு தற்காலிகமாக நிறுத்திவிட்டு மீண்டும் 'நினைவோட்ட'த்தை தொடர எண்ணியுள்ளதாக அப்போது குறிப்பிட்டிருந்தேன்.

அதற்கு திரு சென்னை பித்தன் அவர்கள், நான் வரைந்த படங்களில் எனக்குப் 
பிடித்த படங்களைத் தொடர்ந்து வெளியிடலாமே? என்று கருத்து தெரிவித்திருந்தார். அதனால் எனக்குப் பிடித்த ஒரு படத்தை இங்கே வெளியிடுகின்றேன். 

இந்த படம் மாயா சித்ராலயாவில் நான் அஞ்சல் வழியில் ஓவியத்தை  
முறைப்படி வரைய கற்றபோது, அவர்கள் கொடுத்த ஒரு மாதிரி படத்தைப் 
பார்த்து பென்சிலால் வரைந்தேன். இந்த படம் வரையப்பட்ட தாள்  A 4 
அளவைப்போல் நான்கு மடங்காக அதாவது A 3 அளவில் இருந்ததால், 
என்னால் வீட்டில் உள்ள அலகிடல் கருவியில் (Scanner) அலகிட 
முடியாததால் Friends Xerox நிறுவனத்திற்கு எடுத்து சென்று படத்தின் 
அளவை சுருக்கி எடுத்து வந்து இங்கே வெளியிட்டிருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த இந்த படத்திற்கு மிக நன்று எனக் குறிப்பிட்டு படத்தை Indian Ink இல் வரையச் சொல்லியிருந்தார்கள். ஆனால் இன்னும் அதை செய்யவில்லை.

வேறு சில  படங்கள் பின்னர் பதிவுகளில் வெளியிடுவேன்.  

26 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு கவிதை வீதி சௌந்தர் அவர்களே!

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி ராஜி அவர்களே!

   நீக்கு
 3. பதில்கள்
  1. வருகைக்கு நன்றி ஐயா! தங்களின் ஆலோசனையை கருத்தில் கொள்கிறேன்.

   நீக்கு
 4. மேலும் தொடர்க... ரசிக்க காத்திருக்கிறோம்... வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!


   நீக்கு
 5. ரொம்ப நல்லா இருக்கு சார்.... தொடர்ந்து வரைஞ்சிக்கிட்டே இருந்தா ஒரு ப்ரொஃபஷனலு லுக் வந்துரும்.... வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே!

   நீக்கு
 6. பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

   நீக்கு
 7. ரொம்பவே நல்லா இருக்கு. தொடர்ந்து வரைங்க.... வரைவதை எங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...

  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி வெங்கட் நாகராஜ் அவர்களே!அவசியம் வரைவதை அனைவருடன் பகிர்ந்துகொள்வேன்.

   நீக்கு
 8. ஓவியங்கள் அருமை. தங்களின் கைவண்ணத்திற்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், ஓவியங்களை இரசித்துப் பாராட்டியமைக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

   நீக்கு
 9. ஓவியம் வரைவதற்கு பொறுமை மிகவும் அவசியம். அதுவும் பழைய பாணி ஓவியங்களுக்கு இன்னும் அதிகம் தேவை. தங்களிடம் அந்த பொறுமை உள்ளது என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்தியமைக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!

   நீக்கு
 10. Another facet of your talents ...It is sad that you did not pursue this to the logical conclusion. This particular piece reminded me of the works of SIRPI AND VINU . Shades of Sirpi and shades of Vinu.Had you pursued, I am sure you would have excelled as an artist. Any way what the world of Art lost has been gained by Banking industry. Vasudevan

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வாசு அவர்களே! எனது ஓவியம், ஓவியர் சில்பி மற்றும் ஓவியர் வினு அவர்களின் படைப்புகளை நினைவூட்டியதாக கூறியது பற்றி மகிழ்ச்சி. வங்கித் துறைக்கு வந்ததே ஒரு விபத்துதான். எது நடக்கவேண்டுமோ அது நடந்துவிட்டது!

   நீக்கு
 11. மிகவும் அற்புதமான ஓவியங்கள். இணைப்புக் கொடுத்துள்ள பிற ஓவியங்களையும் பார்வையிட்டேன். என்னை மிகவும் கவர்ந்தவை அரசியல் தலைவர்களின் கேரிகேச்சரும், காந்தியின் படமும், மோகினியாட்டமும், யானைச்சித்திரங்களும். மனமார்ந்த பாராட்டுகள் ஐயா. இவ்வளவு வருடங்களாக பத்திரமாய்ப் பாதுகாத்து வைத்திருப்பது வியப்பான விஷயம். நல்லவேளையாக ஸ்கேன் எடுத்துவிட்டீர்கள். இல்லையெனில் காகிதங்களோடு தங்கள் உழைப்பும் கலைச்சிறப்பும் மட்கிப்போயிருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், நான் பதிவேற்றியிருந்த அனைத்து ஓவியங்களையும் பார்த்து, இரசித்து, கருத்திட்டமைக்கும் பாராட்டுக்கும், நன்றி திருமதி கீத மஞ்சரி அவர்களே!

   நீக்கு
 12. அஞ்சல் வழியில் கற்று ஓவியத்தை திறம்பட வரைதல் என்பது பெரிய விஷயம்தான். உங்களது பழையபதிவுகளில் இருந்த ஓவியங்களை கைவண்ணம் என்ற லேபிளில் சிரமப்படாமல் அனைத்தையும் பார்த்தேன். இளமைக்கால கலைஞர் நன்றாகவே தெரிகிறார். கார்ட்டூன் ஓவியங்கள் அருமை. ஓவியம் கற்றுக் கொண்ட பிறகு நல்ல தேர்ச்சி.

  இந்த பதிவில்,

  // இந்த படம் வரையப்பட்ட தாள் A 4 அளவைப்போல் நான்கு மடங்காக அதாவது A 3 அளவில் இருந்ததால், என்னால் வீட்டில் உள்ள அலகிடல் கருவியில் (Scanner) அலகிட முடியாததால் Friends Xerox நிறுவனத்திற்கு எடுத்து சென்று படத்தின் அளவை சுருக்கி எடுத்து வந்து இங்கே வெளியிட்டிருக்கிறேன். //

  நீங்கள் A 3 > Xerox என்று சிரமப் பட்டதற்குப் பதிலாக, நேரிடையாகவே டிஜிட்டல் கேமராவில் எடுத்து நேரத்தையும் செலவையும் குறைத்து இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! நீங்கள் சொன்னதுபோல் செய்திருக்கலாம். ஏனோ எனக்கு அந்த எண்ணம் வரவில்லை. ஆலோசனைக்கு நன்றி!

   நீக்கு
 13. வரைந்த திறமையைப் பாராட்டுவதா,படங்களைப் இத்தனை நாட்கள் பாதுகாத்து வைத்திருக்கும் ஒழுங்கைப் புகழ்வதா.உங்கள் பன்முகத் திறமையை எண்ணி வியப்பதா.............!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! உங்களிடம் இல்லாத பன்முகத் திறமையா என்னிடம் உள்ளது?

   நீக்கு