ஒன்றரை மாதங்களுக்கு மேல் நடந்த அந்த
ஆய்வுக் குழுவின் கூடவே இருந்து அவர்களுக்கு உதவும்படி மேலாளர் சொன்னதால், அவ்வாறே செய்தேன். அந்த கிளையில்
இருந்த அனைவரும் (பழைய மேலாளருக்கு வேண்டியவர்கள் தவிர) தங்களுக்குத் தெரிந்த தகவல்களை தாங்களாகவே தந்து ஆய்வு முழுமையாக
நடக்க உதவினார்கள்.
அதனால் ஆய்வுக்குழுவிற்கு மிக முக்கியமான தடயங்கள் கிடைத்தன.
ஒரு நாள் குழுவின் தலைவரான தலைமை கணக்காளர்
என்னிடம்.
நீங்கள் இங்கு சுமார் ஒரு வருடம்
இருந்தீர்கள் அல்லவா? இங்கு நடந்தவைகள் பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்கும். பின் ஏன் தலைமை
அலுவலகத்திற்கு சொல்லவில்லை?’ எனக்கேட்டார்.
நான் பதிலளிக்கு முன் எனது
துறைத்தலைவர், அவரிடம், ‘இவர் பேரில் தவறு ஏதும் இல்லை.சில மாதங்களுக்கு முன் இவர் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
நான்தான் இவரது பயிற்சியாளர் சொன்னதை நம்பி,
இவர் புதியவர் என்பதால் தெரிவித்த செய்தி உண்மையாய்
இருக்காது
என எண்ணி அதன் பேரில் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டேன்.’ என்று கன்னடத்தில் சொன்னார். எனக்கு
கன்னடம் தெரியும் ஆதலால் அவர் சொன்னதை புரிந்து கொண்டேன். ஆனால் அவர்கள் பேசியது
புரியாததுபோல் நடந்துகொண்டேன்.
நான் எழுதியது சரி என்பதை இப்போதாவது
ஒத்துக்கொள்கிறாரே என்று நினைத்து எனக்குள் சந்தோஷப்பட்டபோது, ‘தருமத்தின் வாழ்வதனைச்
சூது கவ்வும் தருமம் மறுபடியும்
வெல்லும்’ என்ற மகாகவி பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தின் வரிகள் தான் அப்போது நினைவுக்கு
வந்தது.
ஆய்வு முடிந்து அந்த குழு தலைமையகம்
சென்று அவர்களது அறிக்கையை அளித்தவுடன், அந்த மேலாளருக்கு குற்ற அறிக்கை
(Charge Sheet) கொடுக்கப்பட்டு அவரது பதிலுக்குப்
பின், அவரை விசாரணைக்கு அழைத்தார்கள்.
விசாரணை நான் இருந்த கிளையில்தான் நடந்தது. ஆனால் அவர் வரவில்லை.தான்
ஒரு சர்வாதிகாரி போல் கோலோச்சிய கிளையில்
எந்த முகத்தோடு, விசாரணை அலுவலர் முன் வருவது என நினைத்து வராமல்
இருந்திருக்கலாம். மற்றும் எங்களைப் போன்றோரை பார்க்க கூச்சப்பட்டும் வராமல் இருந்திருக்கலாம். அவர் வராததால் அந்த விசாரணை
முடிவு அவருக்கு
பாதகமாகவே முடிந்தது.அதற்குப் பிறகு அவர் வங்கிப் பணியிலேயே
இருக்கமுடியவில்லை.
அதிகாரம் இருக்கிறது என்று ஆட்டம் போட்டவர், அந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதால், மரியாதையோடு பதவியை விட்டு விலகமுடியாமல், சொல்லாமல் கொள்ளாமல்
போகவேண்டியதாயிற்று.
சும்மாவா சொன்னார்கள் நம்
முன்னோர்கள். ‘தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான்.’ என்று.
நான் Boss கள் பலவிதம்! 2 ல் மனித வள ஆய்வாளர்கள்
Boss கள் அனைவரையும் நான்கு பிரிவாக வகைப்படுத்தி இருக்கிறார்கள் என்று எழுதியிருந்தேன்.
ஆனால் இந்த மேலாளர் நான் குறிப்பிட்டு இருந்த
அந்த நான்கு பிரிவின் கீழும் வரவில்லையே
என நீங்கள் நினைக்கலாம்.இவரைப் போன்றவர்களுக்காக சிறப்புப் பிரிவு ஒன்று ஏற்படுத்தி
அதன் கீழ்தான் இவரைக் கொண்டு வரவேண்டும் போல.
எனக்கு வங்கியில் இருந்த Boss கள் எல்லாம் இவர் போல் இல்லை என்பதை இங்கே சொல்லியே ஆகவேண்டும்.
எனக்கு இன்னொரு Boss இருந்தார். நான்
வேலை பார்த்த ஒரு கிளையில் மேலாளராக இருந்த அவரது பெயரை அவசியம் குறிப்பிட்டாக வேண்டும்.
கேரளாவில் உள்ள கோழிக்கோடு என்ற ஊரை சேர்ந்த அவரது பெயர் திரு N.V.ஷெனாய்.
அவர் அந்த கிளையில் பணி ஏற்ற அன்றே என்னைக்
கூப்பிட்டு, ‘உங்களுக்கு முழு சுதந்திரம் தருகிறேன். நீங்கள் எங்கு போகிறீர்கள், என்ன செய்கிறீர்கள் எனக் கேட்க மாட்டேன்.
ஆனால் வங்கியின் ஆய்வுக்குழுவும் மற்றும் ரிசர்வ் வங்கியின் ஆய்வுக்குழுவும் எந்த வித
விதி மீறலோ அல்லது நடைமுறைத் தவறோ இல்லை என
சொல்லும்படி உங்கள் பணி இருக்கவேண்டும்.
நீங்கள் அவ்வாறு செய்வீர்கள் என நம்புகிறேன்.’ என்று சொன்னார்.
அதுபோல் நான் வெளியே பண்ணை ஆய்வுக்கோ அல்லது
தவணை கடந்த நிலுவைத் தொகைகளை வசூலிக்க சென்றாலோ அவர் எங்கு செல்கிறீர்கள் எனக் கேட்டதில்லை.
ஆனால் நான் அவரிடம் எங்கு போனாலும்,முதல் நாள் மாலையே சொல்லிவிட்டுத்தான் போவேன்.
அவர் கொடுத்த அந்த சுதந்திரத்தை
தவறாக உபயோகப்படுத்தியதே இல்லை.
ஒரு தடவை காலையில் ஒரு ஊருக்கு ஆய்வுக்கு
சென்றுவிட்டு
மதியம் ஒரு மணி கலைந்த தலையுடன் கிளைக்குத் திரும்பினேன்.
(அது ஆடி மாதம் ஆதலால் மோட்டார் சைக்கிளில் சென்றபோது
தலை முடி கலைந்திருந்தது.)
என்னைப் பார்த்துவிட்டு உள்ளே கூப்பிட்டார்.
‘நீங்கள் காலையிலேயே கிளம்பி பண்ணைகளுக்குப்
போய் வருகிறீர்கள் எனத்தெரியும். அதனால் நீங்கள் நேரே கிளைக்கு வரத்தேவை இல்லை.உங்களது அறைக்குப்போய் குளித்து சாப்பிட்டுவிட்டு மதியம்
வந்தால் போதும்.’ என்றார்.
அதற்கு நான், ‘இல்லை சார். விவசாயிகள் வந்து எனக்காக காத்திருக்கக் கூடும்.
அதனால் நேரே இங்கு வந்தேன்.’ என்றேன். ‘விவசாயிகளிடம்
மதியம் தான் நீங்கள் இருப்பீர்கள்..என
சொல்ல சொல்லிவிடுகிறேன்.
நீங்கள் பண்ணைக்கு போகும் நாட்களில் மதியம்
வந்தால் போதும்.’ என்றார்.
இப்போது நினைத்துப் பார்க்கிறேன். எத்தனை பேர் இவ்வாறு சொல்வார்கள். அவர்
ஒரு மாதிரி என்றால் இவர் வேறு மாதிரி.
இவரிடம் பணி புரிந்தது பற்றி பின் எழுதுவேன்.
நான் தில்லிக்கு மாற்றல் ஆகிப் போன பிறகு
மன்னார்குடி பக்கம்
இருந்த யாரோ ஒருவர் வந்து திரு ஷெனாய் அவர்களிடம்
என்னைப்பற்றி
விசாரித்திருக்கிறார்கள். எதற்கு என அவர் கேட்டதற்கு தங்கள் பெண்ணுக்கு ஏற்ற மாப்பிள்ளையாக
நான் இருப்பேனா என்று தெரிந்துகொள்ள விசாரிப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அவர்
சொன்னாராம். ‘எனக்கு திருமண வயதில் பெண் இருந்தால் அவருக்கே என் பெண்ணை கொடுத்திருப்பேன்!’ என்று.
எனது நண்பர்கள் அது பற்றி பின்னர் என்னிடம்
சொன்னபோது,
என் மேல் எவ்வளவு நல்ல எண்ணம் கொண்டிருந்தால் அவர் அப்படி சொல்லியிருப்பார் என
எண்ணி இன்றும் வியந்துகொண்டு இருக்கிறேன்.
நான் முன்பே எழுதியிருந்தது போல், 37 ஆண்டுகளுக்கு மேல் மாநில அரசிலும், மைய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பொதுத்துறை நிறுவனத்திலும், பொதுத்துறை வங்கியிலும் பணியாற்றியபோது, நாற்பதுக்கும் மேற்பட்ட மேலதிகாரிகளிடம்
கீழ் பணி புரிந்திருக்கிறேன். அதனால் ஏற்பட்ட அனுபவங்கள் அனைத்தையும் எழுதினால், பதிவு நீண்டு கொண்டே போகும் என்பதால்,நால்வரிடம் ஏற்பட்ட அனுபவங்களை மட்டும்
உங்களோடு பகிர்ந்துகொண்டேன். மற்றவர்களிடம் ஏற்பட்ட அனுபவங்களில் சிலவற்றை ‘நினைவோட்டம்’ தொடரில் எழுத இருக்கிறேன்.
எனது Boss கள் பற்றி தெரிந்து கொண்ட நீங்கள், நான் Boss ஆனபோது
எப்படி நடந்துகொண்டேன் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டாமா? அது பற்றி வரும் பதிவுகளில்!!
தொடரும்
அவர் வராததால் அந்த விசாரணை முடிவு அவருக்கு சாதகமாகவே...
பதிலளிநீக்கு-இந்த இடத்தில் பாதகமாகவே என்று வர வேண்டும் என்று தோன்றுகிறது எனக்கு...! வித்தியாசமான திரு.ஷெனாய் பற்றித் தெரிந்து கொண்ட நான்... நீங்கள் எவ்விதம் நடந்து கொண்டிருப்பீர்கள் என்பதை யூகித்து வைத்து என் யூகங்களைச் சரிபார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
37 ஆண்டுகளுக்கு மேல் நாற்பதுக்கும் மேற்பட்ட மேலதிகாரிகளிடம் பணிபுரிந்ததை நினைக்கும் போது மலைப்பாக இருக்கிறது...
பதிலளிநீக்குநினைவோட்டம் தொடரையும் 'பாஸ்'ஆக உங்களின் அனுபவத்தையும் அறிய ஆவல். வாழ்த்துக்கள். நன்றி.
பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
காத்திருக்கிறேன் உங்களை boss ஆக பார்க்க!
பதிலளிநீக்குவருகைக்கும், தவறை சுட்டி காட்டியதற்கும், நன்றி திரு பால கணேஷ் அவர்களே!. தட்டச்சும்போது ஏற்பட்ட தவறை திருத்திவிட்டேன். இந்த மாதிரி தவறுகள் நாளேடுகளில் வரும்போது அதை ‘Printers Devil’ என்பார்கள். அதைப்பற்றிய ஜோக்கை நேரில் பார்க்கும்போது சொல்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
பதிலளிநீக்குவருகைக்கும், காத்திருப்பதற்கும் நன்றி ‘வராலாற்று சுவடுகள்’ நண்பரே!
பதிலளிநீக்குநீங்க பாஸா இருந்தப்போ எப்படி இருந்தீங்கன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கோம்
பதிலளிநீக்குமேலாளர்கள் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்று யோசித்தபோது, அவர்கள் ஆரம்ப காலத்தில் வேலை பார்த்தபோது இருந்த மேலாளர்கள் அவ்வாறு நடந்துகொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே! தயை செய்து பொறுத்திருக்கவும்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு பழனி.கந்தசாமி அவர்களே! நீங்கள் சொல்வது சரி. கல்லூரிகளில் முதலாண்டு சேரும்போது ‘ராகிங்’ செய்யப்படுபவர்கள் தான் மறு ஆண்டு தீவிரமாக, புதிதாக வரும் மாணவர்களை ராகிங் செய்கிறார்கள் இல்லயா? அதுபோல்தான் இதுவும் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஅனைத்து செய்திகளையும் தொடர்ந்து எழுதிவரும் தாங்கள் அந்த மன்னார்குடி பக்கத்திலிருந்து வந்து விசாரித்து சென்ற செய்தியை மட்டும் அப்டியே பாதியில் விட்டுவிட்டீர்களே!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு மஸ்தூக்கா அவர்களே! அதிராம்பட்டினம் ஊரை சேர்ந்தவர் அல்லவா அதனால்தான் மன்னார்குடி செய்தி பற்றி கேட்டிருக்கிறீர்கள்! அப்போது நான் புது தில்லியில் இருந்ததால், அந்த பெண்ணின் தாயார் மாப்பிள்ளை ‘வெகு தூரத்தில்’ இருப்பதால், தங்கள் பெண்ணை எப்படி அவ்வளவு தூரம் அனுப்புவது என்று யோசித்ததால் அந்த விசாரிப்பு அதோடு நின்றுவிட்டதாம்.
பதிலளிநீக்கு‘தருமத்தின் வாழ்வதனைச்
பதிலளிநீக்குசூது கவ்வும் தருமம் மறுபடியும் வெல்லும்’ என்ற மகாகவி பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தின் வரிகள் தான் அப்போது நினைவுக்கு வந்தது
பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!
பதிலளிநீக்குசகோதரா நிச்சயம் நீங்கள் பொஸ் என்றால் சிறந்த நிர்வாகமாகத்தான் இருந்திருக்கும். ஆவலுடன்....
பதிலளிநீக்குநல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வருகைக்கும்,எதிர்பார்ப்புக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!
பதிலளிநீக்குஅனுபவங்கள் அருமையானவை.
பதிலளிநீக்கு(முரளிதரனுக்கு நான் பதில் சொல்லட்டுமா?!)
வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! நீங்கள் திரு முரளிதரனுக்கு பதில் சொன்னால் எனக்கு மகிழ்ச்சியே!
பதிலளிநீக்குAs one who had the good fortune of working with you in the same office twice for a considerable period and as one who has observed you from close quarters for over 25 years I want to share some thoughts with others like Mr.Muralidharan who are anxious to know how you conducted yourself as a boss ...
பதிலளிநீக்கு1) A fine gentleman
2) One who valued punctuality
3) Practiced what was preached to others.
4)Firm but flexible
5)Strict but compassionate
6)Disciplinarian but not dictatorial.
7)Workaholic with unbounded energy
8)Elephantine memory
9)Spotting talent and encouraging LEADERSHIP
1o)INCORRUPTIBLE (crowning glory)
11)Roll model to others
I can go on and on .. this is only a trailer ...let the full show be watched by others .
K.Vasudevan
தங்களது கருத்துக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை திரு வாசு அவர்களே!
பதிலளிநீக்கு//As one who had the good fortune//
பதிலளிநீக்குI guess both of you are fortunate.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!
பதிலளிநீக்குHave a good weekend.
பதிலளிநீக்குVetha.Elangathialakm.
தங்களுக்கும் இவ்வார இறுதி நாட்கள் இனிமையாய் இருக்கட்டும் சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!
பதிலளிநீக்குஇன்றுதான் வாசுவின் பின்னூட்டம் பார்த்தேன்.முழுமையாகச் சொல்லிவிட்டார் என நினைக்கிறேன்.அப்படியே வழிமொழிகிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
பதிலளிநீக்கு//அதிகாரம் இருக்கிறது என்று ஆட்டம் போட்டவர், அந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதால், மரியாதையோடு பதவியை விட்டு விலகமுடியாமல், சொல்லாமல் கொள்ளாமல் போகவேண்டியதாயிற்று.//
பதிலளிநீக்குமிகச்சரியான பனிஷ்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
//இவரைப் போன்றவர்களுக்காக சிறப்புப் பிரிவு ஒன்று ஏற்படுத்தி அதன் கீழ்தான் இவரைக் கொண்டு வரவேண்டும் போல.//
இன்று அரசாங்க இலாக்காக்களில் பணியாற்றிடும் பலரையும் இந்த சிறப்புப் பிரிவினில் மட்டுமே கொண்டு வர வேண்டியிருக்கும்.
//‘எனக்கு திருமண வயதில் பெண் இருந்தால் அவருக்கே என் பெண்ணை கொடுத்திருப்பேன்!’//
இதுபோன்றதோர் சர்டிஃபிகேட் பெறுவதுதான் மிகவும் கஷ்டம். :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! தப்பு செய்தால் தண்டனை பெறவேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிவதில்லை. அதனால் தான் தப்பு செய்துகொண்டு இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குதிரு ஷெனாய் அவர்கள் கொடுத்த நற்சான்றிதழ் நான் படித்து பெற்ற சான்றிதழ்களை விட மதிப்பு மிக்கது.