வியாழன், 29 டிசம்பர், 2016

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 7


சிற்றுண்டியை சாப்பிட்டுவிட்டு அரங்க அறைக்கு செல்வதற்கு வந்த வழியே திரும்பும்போது. இடையில் இருந்த அறையில் பொன் விழா சந்திப்புக்கு வந்த நண்பர்கள் தங்களின் வருகையை பதிவு செய்துகொண்டு (Registration) இருப்பதைப் பார்த்து நானும் பதிவு செய்ய அங்கு சென்றேன்.


ஞாயிறு, 11 டிசம்பர், 2016

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 6

அரங்கினுள் நுழைந்தபோது அங்கே இருந்த மேடையின் பின்னே உள்ள திரையில் எங்களது சந்திப்பு பற்றிய இன்னொரு பதாகை மிளிர்ந்துகொண்டு இருக்க, அந்த மேடையில் அமர்ந்து தஞ்சையைச் சேர்ந்த இசைக்கலைஞர் திரு S.K. வேதய்யன் அவர்கள் தன் குழுவினருடன் வீணையை மீட்டி, வருவோருக்கு செவிக்கு விருந்து அளித்துக்கொண்டு இருப்பதைக் கண்டேன்.


வெள்ளி, 25 நவம்பர், 2016

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 5

இப்போதுதான் அறைக்குள் நுழைகிறோம் அதற்குள் கைப்பேசியில் கூப்பிடுவது யாரென்று பார்த்தால் நண்பர் பாலு அவர்கள் தான் இணைப்பில் இருந்தார். நாங்கள் வந்துவிட்டதை அறிந்து எங்களை வரவேற்றுவிட்டு வேறு யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என விசாரித்தார்.

வியாழன், 17 நவம்பர், 2016

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 4

தஞ்சை இரயில் சந்திப்பு நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் வெளியே எங்களை வரவேற்க நின்றுகொண்டிருந்த நண்பர் இக்பாலைப் பார்த்ததும் ஆச்சரியத்தோடு பார்த்து ‘நான் தான் வேண்டாம் என்று சொல்லியிருந்தேனே. எதற்கு இந்த வேளையில் சிரமப்பட்டு வந்தீர்கள்?‘ என கேட்டேன்.


ஞாயிறு, 6 நவம்பர், 2016

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 3

தஞ்சையில் நடக்க இருக்கும் பொன் விழா சங்கமத்திற்காக காத்திருக்கும்போது ஆகஸ்ட் கடைசி வாரத்தில் ஓரு நாள் சென்னையில் இருக்கும் நண்பர் ஹரிராமன் தொடர்புகொண்டு செப்டம்பர் 10 ஆம் நாளன்று தஞ்சை செல்ல நான் எந்த இரயிலில் முன்பதிவு செய்திருக்கிறேன் என விசாரித்தார். ஏனெனில் அவரும் அதே இரயிலில் முன்பதிவு செய்தால் அவர் தம் துணைவியாரோடு எங்களோடு வரலாமே என்பதற்காக.

புதன், 26 அக்டோபர், 2016

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 2

2013 ஆம் ஆண்டு தஞ்சையில் சந்திக்க முடிவெடுத்ததுமே அந்த சந்திப்பை சிறப்பாக நடத்த தஞ்சை நண்பர்கள் உடனே செயலில் இறங்கிவிட்டார்கள் என்று சொல்லியிருந்தேனல்லவா? அந்த சந்திப்புக்காக இரவு பகல் பாராது அதைப் பற்றியே சிந்தித்து பொன் விழா சந்திப்பை சிறப்பாக நடத்த முக்கிய பங்காற்றியவர் நண்பர் R.பாலசுப்ரமணியம்.

செவ்வாய், 18 அக்டோபர், 2016

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 1

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல் பட்டப் படிப்பை
1962-1966 இல் படித்த வகுப்புத் தோழர்களாகிய நாங்கள், பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் 1967 ஆம் ஆண்டு சந்தித்த பிறகு, முதன் முறையாக புதுவையில் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 22, மற்றும் 23 நாட்களிலும், இரண்டாவது முறையாக கோடைக்கானலில் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 9,10, மற்றும் 11 ஆம் நாட்களிலும் சந்தித்தோம்.

புதன், 5 அக்டோபர், 2016

எழுதிக்கொண்டு இருப்பதை நிறுத்தினால் என்னவாகும்?

2009 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 30 ஆம் நாள் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பதிவுலகம் நுழைந்த நான் தொடர்ந்து 9 ஆண்டுகள் இடைவிடாது எனது வலைப்பக்கத்தில் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.


வெள்ளி, 23 செப்டம்பர், 2016

ஏன் இந்த இடைவெளி?


ஜூலை 27 ஆம் தேதிக்கு பிறகு என்னால் வலையுலகம் வந்து பதிவிட முடியவில்லை.காரணம் வீட்டை சீரமைக்கும் பணியில் தீவிரமாக இருந்தது தான்.

சென்ற ஆண்டு சென்னையில் பெய்த பேய் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் எனது வீட்டிலும் கார் நிறுத்தும் இடத்தில் தண்ணீரும், சாக்கடை நீரும் புகுந்துவிட்டன. இந்த ஆண்டும் பெருமழை இருக்கும் என்ற வானிலை அறிவிப்பு காரணமாக முன் எச்சரிக்கையாக, கார் நிறுத்தும் இடத்தின் உயரத்தை ஒரு அடி உயரம் உயர்த்தவும், வீட்டின் மேற்புற தளத்தில் புது ஓடுகள் பதிக்கவும் எண்ணி ஒரு ஒப்பந்தகாரரை அணுகினேன். அவரும் இரண்டு பணிகளையும் மூன்று வாரத்தில் முடித்து. தருவதாக சொல்லி பணியைத் தொடங்கினார்.

ஆனால் உள்ளே நுழைந்ததும் ‘சார். வீட்டு சுவர்களுக்கு வண்ணம் பூசும் பணியையும் கையோடு கையாக முடித்துவிடலாம் எனக் கூறி ஆரம்பித்து,இடையிடையே சிற்சில பணிகளையும் (அவருக்கும் வேலை வேண்டுமே) மேற்கொண்டு ஒரு வழியாக 48 நாட்களில் வேலையை முடித்துக் கொடுத்தார். .இந்த 48 நாட்களும் சீரமைப்பு பணி நடப்பதை காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை மேற்பார்வை செய்தபடியால் அங்கும் இங்கும் நகரமுடியவில்லை அதனால் பதிவுலகம் வர இயலாததால் பதிவிட இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன.

இன்னும் ஓரிரு நாட்களில் பதிவிட ஆரம்பித்துவிடுவேன். பதிவுலக நண்பர்கள் தரும் ஊக்கத்திற்கு நன்றி!



புதன், 27 ஜூலை, 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.31



அப்போதைய சென்னை ராஜதானியில் 1937 இல் நடந்த தேர்தலுக்கு பிறகு மூதறிஞர் இராஜாஜி அவர்கள் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, அவர் தான் முதன் முதலில் இந்தியை பள்ளிகளில் கட்டாய பாடமாக்கினார் என்றும், அரசு இந்தியை கட்டாய பாடமாக்க இருப்பதை எதிர்த்து 1938 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 3 ஆம் நாள் திரு இராஜாஜி அவர்களின் வீட்டிற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய 73 பெண்கள் உட்பட 1271 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் அங்கேதான் முதன் முதல் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டதிற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது என்றும் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.

வெள்ளி, 8 ஜூலை, 2016

கண்ணீர் அஞ்சலி




கல்வியாளரும், எழுத்தாளருமான என் அண்ணன் திரு வே.சபாநாயகம் அவர்கள் 04-07-2016 அன்று அதிகாலை 4 மணிக்கு விருத்தாசலத்தில் இயற்கை எய்திவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 27 ஜூன், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.30


இந்தி திணிப்பை ஏதோ தமிழ் நாட்டில் மட்டும் தான் குறிப்பிட்ட சிலர் எதிர்ப்பது போலவும், மற்ற மாநிலத்தினர் குறிப்பாக தென்னகத்தில் உள்ள மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் எதிர்க்கவில்லை என்பது போலவும் ஒரு மாயையை, தவறான கருத்தை மய்யத்தில் ஆள்வோரும் இங்குள்ள சிலரும் பரப்பி வந்திருக்கின்றனர். இன்னும் பரப்பி வருகின்றனர்.

செவ்வாய், 14 ஜூன், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.29


இந்தி மொழித் திணிப்பு பற்றிய சச்சரவு ஓய்வதற்குள் அதே ஆண்டு (2014) செப்டம்பர் மய்ய அரசின் அலுவல் மொழித் துறை ஒரு சுற்றறிக்கையை அனுப்பி திரும்பவும் இன்னொரு சச்சரவு உண்டாக்க வழி வகை செய்தது. அது என்ன என்று அறிவதற்கு முன் ஜூலை திங்களில் நடந்த மற்றொரு நிகழ்வைப் பார்ப்போம்.

சனி, 4 ஜூன், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.28


1986 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் எதுவும் பெரிதாக தமிழகத்தில் நடைபெறவில்லை. அந்த சமயத்தில் மய்ய அரசின் ஆட்சிப்பொறுப்பில் இருந்த காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகள் மெதுவாக, அதே நேரம் நிதானமாக ஆரவாரமில்லாமல் இந்தியை அரசுப் பணிகளில் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டன.

புதன், 25 மே, 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.27


1986 ஆம் ஆண்டு மய்ய அரசு நாடெங்கிலும் நவோதயா பள்ளிகள் நிறுவ முயற்சி செய்தபோது அந்த பள்ளிகளில் இந்தி கற்பது கட்டாயமாக்கப்படும் என அறிந்ததும் திமுக அதை எதிர்த்தது என்றும் தமிழகம் முழுதும் நவம்பர் 17 ஆம் நாள் அந்த கட்சியின் உறுப்பினர்கள் மய்ய அரசின் கல்விக் கொள்கைக்கெதிராக, அரசியலமைப்பின் பதினேழாவது பகுதியைக் தீயிலிட்டு போராட்டம் நடத்தியபோது திரு கருணாநிதி உட்பட 20,000 க்கு மேற்பட்ட திமுக தொண்டர்கள் கைதாயினர் மற்றும் அந்த போராட்டத்தின் போது 21 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர் என்றும் சொல்லியிருந்தேன்.

வியாழன், 5 மே, 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.26


1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம், 1967 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்று அதற்கான தீர்மானத்தை 1968 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 23 ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய பிறகு, இந்தி திணிப்பு எதிர்ப்பாளர்கள் தங்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டதால், மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பியது.

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.25


தி.மு. க. ஆட்சிக்கு வந்த 1967 ஆம் ஆண்டு இந்தி திணிப்பு போராட்டக்குழுவில் இருந்த தீவிரவாத பிரிவைச் சேர்ந்தோர் போராட்டத்தை மீண்டும் துவக்கினார்கள் என்றும், 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 19 நாளன்று துவங்கிய அந்த போராட்டம் டிசம்பர் 21 ஆம் நாளன்று வன்முறை போராட்டமாக மாறியது என்றும்  முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

புதன், 13 ஏப்ரல், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.24


1967 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் வெற்றிபெற்றது போலவே பாராளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க அணிக்கு வெற்றி முகம் தான். திமுக 25 தொகுதிகளிலும், சுதந்திரா கட்சி 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும்,முஸ்லிம் லீக் 1 இடத்திலும் வெற்றி பெற்று 39 இடங்களில் 36 இடங்களை கைப்பற்றின. ஆண்ட காங்கிரசோ வெறும் 3 இடங்களோடு திருப்தி பட்டுக்கொள்ளவேண்டியதாயிற்று.


புதன், 6 ஏப்ரல், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.23


1967 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் மாநில சட்டசபைக்கும் பாராளுமன்றத்திற்கும் தேர்தல் நடந்தபோது, கர்நாடக மாநிலம் (அப்போது மைசூர் மாநிலம்) தார்வார் மாவட்டத்தில் கதக் (Gadag) என்ற ஊரில் தேசிய விதைக் கழகத்தில் விதைப் பெருக்க அலுவலராக (Seed Production Assistant) ஆக நான் பணிபுரிந்துகொண்டிருந்தேன். (இப்போது கதக் தனி மாவட்டமாக ஆகிவிட்டது.)

சனி, 26 மார்ச், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.22


1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பு போராட்டம் ஒருவழியாக தற்காலிகமாக முடிவுக்கு வந்ததால், தமிழகத்தில் அமைதி திரும்பியது போல் இருந்தாலும் அது புயலுக்குப்பின் அமைதி போன்றது தான் என்பதை அப்போதைய அரசு உணரவில்லை.

வெள்ளி, 18 மார்ச், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.21


1966 ஆம் ஆண்டு சனவரி திங்கள் 27 ஆம் நாள் மாலை, அதற்கு முந்தைய ஆண்டு அதே நாளன்று காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் துறந்த மாணவர் திரு இராஜேந்திரனுக்கு முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி செலுத்த அண்ணாமலைபல்கலைக்கழகத்தில் உள்ள திறந்த வெளி அரங்கில் (Open Air Theatre) மாணவர்கள் அனைவரும் கூடினோம்.

வெள்ளி, 11 மார்ச், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.20


1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 25 ஆம் நாள், பாராளுமன்ற அவைத் தலைவரால், பாராளுமன்றத்தில் கலந்தாய்வு (Discussion) க்காக அனுமதிக்கப்பட்ட பாராளுமன்ற துணைக்குழு தயாரித்த அலுவல் மொழி சட்டத்தில் கொண்டுவரவேண்டிய மாற்றம் பற்றிய சட்ட முன்வரைவு (Bill), பஞ்சாப் பிரிவினைப் போராட்டம் மற்றும் காஷ்மீர் பிரச்சினைகளை காரணம் காட்டி சட்ட திருத்தம் கொண்டுவர அது சரியான நேரம் இல்லையென கூறி அந்த சட்ட முன்வரைவு திரும்பப்பெறப்பட்டது என்று முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன்.

சனி, 5 மார்ச், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.19

மாணவர்கள் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை பிப்ரவரி 12 ஆம் நாள் கைவிட்ட காரணத்தால் தமிழகத்தில் மூடப்பட்டிருந்த கல்லூரிகளும் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டன. எங்களது அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் 50 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது. நாங்களும் திரும்பவும் வகுப்புக்களுக்கு செல்லத் தொடங்கினோம்.

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.18


மய்ய அரசின் இந்தி திணிப்பு பற்றி காங்கிரசிற்குள்ளும் தீவிர கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.1965 ஆம் ஆண்டு சனவரி 31 நாளன்று அப்போதைய மைசூர் மாநில முதல்வர் எஸ்.நிஜலிங்கப்பா, மய்ய அமைச்சர் நீலம் சஞ்சீவ ரெட்டி, காங்கிரசு கட்சித்தலைவர் காமராஜர், வங்காள காங்கிரசு தலைவர் அதுல்ய கோஷ் ஆகியோர் மைசூரில் ஒன்றுகூடி இது பற்றி விவாதித்தனர்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.17


இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை நசுக்க இரும்புக் கரம் கொண்டு அடக்குவதாக நினைத்து அப்போதைய முதல்வர் திரு பக்தவத்சலம் அவர்கள் காவல்துறையை கட்டவிழ்த்து விட்டதால் காவல்துறை மாணவர் ஊர்வலங்கள் மீது தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்த அது நிலைமையை மேலும் மோசமாக்கியது.

வியாழன், 4 பிப்ரவரி, 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.16



திடீரென பல்கலைக்கழக விடுதியை காலி செய்ய சொன்னதும் நானும் அறையை காலி செய்துவிட்டு பேருந்து நிலையம் சென்று விருத்தாசலம் செல்லும் பேருந்தில் ஏறி ஊருக்கு புறப்பட்டேன். எங்களது போராட்டம் காரணமாக பல்கலைக் கழகம் மூடப்பட்டுவிட்டது என்று ஊருக்கு போனவுடன் அப்பாவிடம் சொன்னால் என்ன சொல்வார்களோ என்ற பயம் அப்போது எனக்கில்லை.

திங்கள், 25 ஜனவரி, 2016

தொடரும் பயணங்கள் – தொடர் பதிவு


எனது பள்ளிப் பருவத்திலும், கல்லூரி நாட்களிலும் பின்னர் மாநில அரசின் வேளாண்மைத்துறையிலும் மற்றும் மய்ய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய விதைக் கழகத்திலும், நாட்டுடைமையாக்கப்பட்ட சிண்டிகேட் வங்கியிலும் பணி புரிந்தபோது மேற்கொண்ட பயணங்கள் அநேகம்.

வெள்ளி, 15 ஜனவரி, 2016

பொங்கல் வாழ்த்து!


பொங்கல் திருநாளாம் புத்தாண்டு பொன்னாளில்
பாசமும் நேசமும் பால்போல பொங்கவும்
இன்பமும் ஈகையும் இவ்வுலகில் தங்கவும்
துன்மையும் துன்பமும் தொலைந்து போகவும்
நன்மைகள் யாவையும் நாட்டவர் பெற்று
நலமுடன் வாழ இறைவனை வேண்டி
அடி யவன் வாழ்த்தும் வழுத்து,



பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் உளங்கனிந்த பொங்கல் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

(மேலே உள்ள கோலங்கள் என் மகள் எங்கள் வீட்டின் முன் இன்று போட்டவை.)


ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் வாழ்த்தை நானே எழுதுவதுபோல் இந்த ஆண்டும் எழுதியிருக்கிறேன். சென்ற ஆண்டு பதிவர் திரு ஜோசப் விஜூ அவர்களின் ‘ஊமைக்கனவுகள்’ என்ற வலைப்பதில் வந்த ‘யாப்புச்சூக்குமம்’ என்ற தொடர் பதிவின் மூலம் வெண்பா எழுத கற்றுக்கொண்டு மூன்று சிறிய தவறுகளுடன் பொங்கல் வாழ்த்தை பஃறொடை வெண்பாவாக எழுதியிருந்தேன்.

இந்த ஆண்டும் பொங்கல் வாழ்த்தை வெண்பாவில் எழுத எண்ணி எழுதியிருக்கிறேன்! ஆனால் இதில் எதுகை மோனை சரியாக வரவில்லை என்பது எனக்குத் தெரியும். தவறு இருப்பின் திரு ஜோசப் விஜூ அவர்கள் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.


வாழ்த்துக்களுடன்

வே.நடனசபாபதி





வெள்ளி, 8 ஜனவரி, 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.15


மதுரையில் இந்தி திணிப்பை எதிர்த்து ஊர்வலம் நடத்திய மாணவர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களாகிய நாங்கள் 27-01-1965 ஆம் ஆண்டு நடத்திய கண்டன ஊர்வலத்தில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சக மாணவன் ஒருவனை பறிகொடுத்தோம் என்பதையும், அதற்கு நீதி கேட்டு எங்கள் பல் கலைக் கழகத்தின் Eastern Hostel இன் முன் வாயில் கதவருகே நாங்கள் அமர்ந்திருந்தபோது சிதம்பரம் நகரசபை தலைவர் வந்து பேசியும் எங்களை சமாதானப்படுத்தமுடியாமல் திரும்பிவிட்டார் என்று சொல்லியிருந்தேன்.